ஞாயிறு, 11 நவம்பர், 2012

மழை போல்!!


ஐந்து புறமும்
சுவரற்ற நிலையிலும்
குளிரை காரணமாக்கி
முதல்முறை அணைத்தற்கு
மழையை பிழை சொன்னதில்லை
இருவருமே

அதன் பின்
ஒவ்வொரு மழையிலும்
மண் வாசத்திற்க்கு பதில்
உன் வாசமே...

தூறலாய் தொடங்கும்
எல்லா கனமழையும்
பின் தூறலாய் அடங்கும்
என உணரவில்லை நான்.....

உண்மை சுடுகையில்
மழையில் நனைந்து
பின் கரைந்து மறைகிறது
எண்ணங்கள்.
தேங்கிய மழை நீர் வடிவது போல் .....

நாமாய் பிரிந்து
நாட்கள் பல ஆனாலும்,
நம்மை காதலர் என்றே
இன்னும் சொல்ல தோன்றும்

தள்ளித் தள்ளி
தனியே விழும் துளிகளை
மழை என்று ஒன்றாய் அழைப்பதை போல !

- அகன்
 

கருத்துகள் இல்லை: