வியாழன், 31 ஜனவரி, 2013

தொலையாத உன் நினைவுகளுடன் - 1



எறும்பாய் காலம் ஊர
கல்லாய் தேய்கிறது
உன் நினைவு
மூன்று யுகம் ஆகுமோ
முழுதாய் தேய?
கணிணியில் மூழ்கி
மறக்க நினைத்தாலும்
கடவுச்சொல்லாய் நீ !
இமை மூடா கனவுகள்
எதிர் காலம் மாற்றும் என்றால்
கடந்த காலம் மாற்றுமா
இந்த
இமை மூடா நினைவுகள்?
- அகன்   
 
   

வெள்ளி, 25 ஜனவரி, 2013

நனைந்த நினைவுகள்



நானும் என் காதலும்
வேண்டாம் என்று
விலகி சென்றாய்.

காயம் ஆறாமல்
கண்ணீர் சிந்தும் வேலையில்
கை குட்டைக்குள்
ஒளிந்துகொண்டு  என்
கண்ணீரில் நனைகிறது
உன் நினைவுகள்.

நான் உனக்காய் அழ
பாவம் அது
எனக்காக நனைகிறது  !

- அகன்



 

சனி, 19 ஜனவரி, 2013

காதலும் காதல் சார்ந்த கவிதையும் - 4



என் காதல் பூதத்தின்
தீரா பசிக்கு
நீ கொடுக்கும்
முத்தங்களும்
போதவில்லையாம் .
என்னவாது செய்து
தீர்துவிடேன்
அதன்  பசியை !!!

- அகன்

 

செவ்வாய், 15 ஜனவரி, 2013

திங்கள், 14 ஜனவரி, 2013

காதலும் காதல் சார்ந்த கவிதையும் - 1



மழைக்கால நடை பயணத்தில்

கால் தடுமாறிய  தருணமொன்றில்

இடை பற்றி  காப்பாற்றினாய்.

ஆறாத காதல் காயங்களுடன்

இன்றும் தோன்றுகிறது,

அன்று

விழுந்தே இருக்கலாமோ என்று ???



- அகன்