புதன், 20 மார்ச், 2013

காதல் கடிதம் வேறொரு வடிவில்







  
காதல் கடிதம்

காதல் கடிதம்

வேண்டும் என்று

கண்கள் உருட்டி

கேட்கிறாய்...


காரணம் தான் புரியவில்லை!!!


காதலை,

சொல்லும் போது

இருக்கும் கூச்சம்,

எழுதும் போது

இருக்காதோ??


காதில் விழும் வார்த்தைகள்

மூளைக்குள் செல்வது போல்

கண்ணில் விழும் வார்த்தைகள்

உயிருக்குள் செல்லுமோ?


எனது இயல்பான

வார்தைகளுக்கு

இன்னும் கொஞ்சம் உணர்ச்சி சேர்த்து

மீண்டும் மீண்டும் படிப்பாயோ?

 
எழுதி அழித்து,

அழித்து எழுதி

இப்போது

 எதுவுமே மிச்சமில்லை

 கடிதத்தில்!


காதலிப்பதை

 உணர்கிறேன் 

நான் !


காதலிக்கப்படுவதை

 உணர்கிறாய் 

நீ !



பின் 

கடிதத்தில் ஏன் காதலை

அடைக்கச் சொல்கிறாய்?

 

அது காற்றிலேயே

திரியட்டுமே… !


- அகன்



 

செவ்வாய், 19 மார்ச், 2013

காதல் கடிதம் .....


ஒரு காதல் கடிதம்

வாழ்ந்து முடிக்கும் காலத்துக்கும்
உன்னோடான காதலை
ஒரு கடிதத்தில் கேட்கிறாய்.


எழுதிட முடியாதா என்ன??
இதோ
நான் தயார்.


அதற்க்கு முன்,
ஒரு தாளில் கொட்டி தீர்த்திட முடியுமா ???
ஏன் சொல்லவேண்டும்?
புரியாமலா காதலில் கசிந்துருகுகிறாய் ??
அறியாமலா நேசமிகுதியில் கலந்தோம்??
இப்படி கேள்விகள் பல.


இல்லை.
இயல்பாய் முளைத்து,
விருட்சமான காதலை
எழுதத்தான் போகிறேன்....


உன் காதல் பார்வை தாளாமல்
திணறுவது போல் ,
சொல்லவும் எழுதவும் கோடி இருந்தும்
சொற்கள் கொண்டு
அலங்கரிக்க முடியாமல்
இப்போதும் தடுமாறுகிறேன்!!


எங்கிருந்து ,
எப்படி ஆரம்பிப்பது ??
ம்ம்ம்..
இதோ கிடைத்துவிட்டது
முதல் வார்த்தை "பிரியமான".


ஒ ,
ஆரம்பம் சரி ,
ஆனால் முடிக்க இயலுமா ??
ஆதியும் அந்தமும் அற்ற
காதலை ஒரு காகிதத்தில்
சொல்வது சாத்தியமா ??


இதோ பெற்றுக்கொள்
நீ கேட்ட கடிதத்தை.
என்ன??
ஏதுமில்லா வெள்ளை காகிதம்
என்று யோசிக்காதே?


யாதுமாகி உன்னில் நிறைந்திருக்கும்
என் காதலை
வார்த்தைகள் கொண்டும்
எழுதுவது அசாத்தியமே!!
 


என்னை அறிந்த உனக்கு
இந்த

வெற்றுக்கடிதம் புரியாதா ??


- அகன்





ஞாயிறு, 17 மார்ச், 2013

நான் காதலன்




நான் காதலன்
முத்தையாவின் மகனாக
அண்ணாமலையின் தம்பியாக
வசந்தாவின் மருமகனாக
கவின்மொழியின் அப்பாவாக
இப்படியான அறிதல்களைவிட
எனக்கு எப்போதும் பிடித்து
வெண்ணிலாவின் காதலனாக
அறியப்படுவதே .

- மு.முருகாஷ்

 

சனி, 16 மார்ச், 2013

தொலையாத உன் நினைவுகளுடன் - 3

 
 




நண்பர் குழாம்

மத்தியில்

கதையும் கிண்டலுமாக 

சிரித்திருக்கையில்,   

நான் அறியாமல் 

உன் உலகம் கடத்திவிடும் 

நினைவுகளை

என்னதான் செய்வது??

- அகன்

 

வெள்ளி, 15 மார்ச், 2013

காதலும் காதல் சார்ந்த கவிதையும் - 6


நாம் மென்று தின்ற 

காதலின் மிச்சங்களாக 

மன அறை எங்கும் 

சிதறிக் கிடக்கிறது

முத்தங்கள்.



ஒவ்வொன்றாய் 

கோர்த்தேடுக்கிறேன் 

இன்னும் 

முடிந்தபாடில்லை......



- அகன்