திங்கள், 28 அக்டோபர், 2013

அனத்தலின் முதல் பிறந்த நாள் !!




பல பிளாக்குகள தேடி படிச்ச ஆர்வம் சும்மா எழுதுவோம்னு ஆரம்பிச்சி நண்பனின் ஒத்துழைப்போட முதல் வருடம் வந்தாச்சு.

டைரி குறிப்பு மாதிரி எதாவது எழுதலாம்னு யோசிச்சி ‘தேன்மிட்டாய்’ எழுதி நண்பனுக்கு அனுப்பி வெச்சேன். முதல் முயற்சி அவ்வளவு மோசமில்லைன்னு சொல்லல பட் அவன் ரொம்பவும் திட்டல. அந்த தைரியத்துல அடுத்து ‘புங்கை மரம்’ ன்னு ஒரு டாப்பிக் எழுதி அனுப்பினேன். அதை படிச்சிட்டு ஐஎஸ்டி கால்ல ஒரு ரெண்டு மணி நேரம் லெக்சர் குடுத்து..உஸ்ஸ்ஸ்ஸ்

எழுத்து எழுதறவங்களுக்கும் படிக்கறவங்களுக்கும் புடிச்ச மாதிரி இருக்கணும் அவன் பல விஷயங்கள சொன்னான். அதை எல்லாம் கேட்டு என்னோட ரசனையின் வெளிப்பாடா எழுதி அவன் பரவாயில்லைன்னு சொன்ன பதிவுதான் ‘நிலா பாருங்கள்’. சரி நாலு பதிவு தேத்திட்டோம் இப்ப பிளாக்குக்கு பேர் வெக்கணுமே. என்ன என்னவோ யோசிச்சு “அனத்தல்”ன்னு முடிவு பண்ணோம். மத்தவங்க படிச்சி கேவலமா இருந்து கிண்டல் கேலிக்கு ஆளாக கூடாதுன்னு அவன் பேரையே கடன் வாங்கி (புனை பெயர்) வச்சிகிட்டேன்.

எப்பவும் கவிதை பத்தி நிறைய பேசுவோம் ரசிப்போம் விவாதிப்போம். அந்த மாதிரி ஒரு பொன் மாலை பொழுதில் நீ ஏன் கவிதை எழுத கூடாது சும்மா முயற்சி பண்ணி பாருன்னு நண்பன் சொன்னதால எழுதுவோம்னு ஆரம்பிச்சி, இன்னைக்கு கவிதைகளின் அணிவகுப்போட முதல் பிறந்த நாள் எங்க அனத்தல்க்கு.

எப்பவும் போல வழக்கமான எழுத்து பிழையோட ஸ்டார்ட் மியூசிக் ஆச்சு.. பாவம் தோழன், வேலை வெட்டிய விட்டுட்டு எழுத்து பிழை சரி பண்ணி குடுத்து,சில பல திட்டுகள் வாங்கி இப்படி இருந்தா நல்லா இருக்கும்னு சொல்லி குடுத்து ஓரளவுக்கு எழுத கத்துக்கிட்டு இருக்கேன். தோழனோட சில பல காரிதுப்பல்கள் கழுவி ஊத்தல்கள் எல்லாம் மானே தேனே மாதிரி சேத்துக்கனும் எல்லா கவிதைக்கும்..

இணையம் கத்துக்குடுத்த மிக முக்கியமான நல்ல பழக்கம் படிக்கறது. முன்னேல்லாம் புடிச்ச எழுத்தாளர் புத்தகம் மட்டும் படிப்பேன். இப்போ அது மாதிரி இல்லாம கிடைக்கற எல்லாத்தையும் படிக்க கத்திட்டு இருக்கேன். வார்த்தை எப்படி பயன்படுத்தி இருக்காங்க கொஞ்சம் கவனமா பார்க்கிறேன். இந்த ஒரு வருஷத்துல மிக சிறந்த கவிதைகள் எழுதாட்டியும், எங்க மனசுக்கு திருப்தியான சில கவிதைகள் எழுதனதுல கொஞ்சம் சந்தோஷமா இருக்கு.

எங்க அனத்தல்லின் மிக முக்கிய ரசிகர் என்னோட கணவர் அப்புறம் சில கூட பிறக்காத தம்பிகள். நன்றி  எல்லாம் சொல்லமாட்டோம் ஏன்னா ரசிச்சே ஆகணும் அது தான் அவுங்க விதி.

நடுவுல கொஞ்சமா டிவிட்டர் பக்கம் போனதுல அனத்தல்ல நிறைய எழுத முடியல. கூடவே தேவை இல்லாத ஆணிகள் ஆனா புடிங்கியே ஆவவேண்டியதும் சேந்துகிச்சி. அடுத்த வருடம் இன்னும் அட சொல்ல வைக்கற மாதிரி எழுத முயற்சி பண்ணனும் பாக்கலாம் .

பதிவுகளை ரசித்த அனைவருக்கும் நன்றிகளுடன் அனத்தல் அடுத்த ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கிறது..

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனத்தல் !!

அகன்.

1 கருத்து:

Unknown சொன்னது…

அக்கா சூப்பரு கலக்கலு, தாறுமாறு டாரு டாரு :)) சீக்கிரமா விகடன் சொல்வனத்துல உங்க கவிதை வர வாழ்த்தறேன் ஆங்! அனத்தலும் அக்காவும் தொடர்ந்து கலக்க வாழ்த்துகள் ஈஈஈஈ :))))
-அன்பு தம்பி கெத்து :-)