சனி, 19 அக்டோபர், 2013

டிவிட்டர் மொழி காதல் துளிகள் - 1





Y
எத்தனை இயல்பாய்
உன் பெயர்
எழுதுகிறது
இந்த புது பேனா!!

 
Y
உறக்கம் கலைப்பதில்
நீயோ
உன் நினைவோ
தோற்ப்பதே இல்லை.
ஏதோ ஒன்றாய் ஆரம்பித்து
என்னுள் நிறைவதில்
எங்கே தூக்கம்.??
 

 Y
எனக்கான இயல்பை
உன்னிடம் தொலைத்துவிட்டு
அடையாளம் தேடி அலையும்
என்னிடத்தில்
எதுவுமில்லை.
உன்னை தவிர!!
 
 Y
விட்டும் விலகாமல்
ரொம்பவும் ஒட்டாமல்
வாழ்க்கை முழுக்க
கூடவே வருகிறது
முதல் காதல்!!
 
 Y
அலுக்கவில்லை!!
நெஞ்சோடு
அணைத்தபடி பேசு.

 Y
புதிதாய்
எதுவும் மாறாததால்..
அதே வார்த்தைகள் தான்
நம்மிடையே!!
 
 Y
உன் விரல்கள்
என்னதான் பேசும்
என் விரல்களுடன்???
விலக மனமற்று
இணைந்தே கிடக்கிறது.!!
 

- அகன்

கருத்துகள் இல்லை: