ஞாயிறு, 27 அக்டோபர், 2013

நமக்கானவை...



 
Y
சொல்லேன் ஏதாவது என்று
நீ கேட்கையில் ,
சொல்லிவிட தான் ஆசை.
காற்றில் அளந்தெடுக்கும்
வார்த்தைகளை
எப்படி மொழிபெயர்ப்பது ??
 
Y
எனக்கு மட்டும் புரியும்
சங்கோத வார்த்தையுடன் நீ.
உனக்கு மட்டும் புரியும்
மென்சிரிப்புடன் நான்.
நம்மை ரசித்தபடி காதல்!!
 
Y
உன்னோடு
கோப்பை தேனீரும்
சிந்தி சிதறும் புன்னகையும்
ஈரம் காயாத இதழைணைப்பும்
திகட்டுவதில்லை...
 
Y
"எந்த நொடி என்னில் விழுந்திருப்பாய்??"
என்று நொடிக்கொரு தரம்
யோசிக்கையில்
உன்னுள் நான்...
 
Y
ஈரம் போகாத காதலுடன் நான்
என் கூந்தல் கலைத்து
அருகில் நீ!!
 
Y
உதடுகளை அணைத்துவிட்டாய்.
சிணுங்கும் வளையலை???
 
Y
அன்பு சண்டையிட்டு
 சலித்துவிட்டது,
வா
கொஞ்சம் கொஞ்சிவிட்டு
மீண்டும் தொடராம்...
 
Y
கை பிடித்து
எதுவும் பேசமால் நீ!
 உள்ளம் பேசும் அனைத்திற்கும்
பதில் அளித்தபடி நான் !!
 
Y
உற்று பார்த்திருக்கிறோம்
 ஊடல் அவிழும் நொடிக்காய்.
 இதோ இப்போது
அரங்கேறிவிடுமோ
என்ற எதிர்ப்பார்ப்புடன்
நான்கு கண்கள்..
 
Y
எந்த நொடி மலர்ந்தது
என்ற தேடலில்
தொடங்குகிறது
காதலின் சுவாரஸ்யம் ...

-அகன்

1 கருத்து:

இராய செல்லப்பா சொன்னது…

ஜாக்கிரதை! இந்தக் கவிதை உங்களுக்குப் பல காதலிகளைக் கொண்டுவந்துவிடக்கூடும்! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை