சனி, 19 அக்டோபர், 2013

உயிர் பெற்ற எழுத்து



உன்னை மறக்கவிடாமல்

இருக்க

நீ கொடுத்துச் சென்ற

கவிதைகள்

தினமும் கனவில்....


ஒவ்வொரு எழுத்தாய்

உன் உருப்பெற்று


உயிரை வதைக்கிறது....


எழுத்து வழி

இதயம் நுழைந்தவன்.. 


இன்று இயல்பு மாறி

நான் எழுதுகிறேன்

நீ வாசிக்க...


- அகன்

2 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

அற்புதம்
கவிதைக்கும் காதலுக்கும் உள்ள
இயல்பான நெருக்கத்தை உணர்த்திப்போகும்
கவிதையை மிகவும் ரசித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
கவிதையின் வரிகள் அழகு அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-