சனி, 19 அக்டோபர், 2013

முத்த மொழி

 

 

Y
இழுத்தணைத்து
முத்தமிடும் நொடியில்
இல்லாமல் போகிறேன்!!

Y
அன்பின் அதீதத்தை
முத்தத்தால்
மொழிபெயர்க்கிறாய்...

Y
சமாதனப்படுத்த
நீ கொடுக்கும்
முத்தங்களால் அலுக்கவில்லை,
உன்னோடு போடும்
சண்டைகள்..

Y
உறங்கிவிட்டாய்.
சிதறிய முத்தங்களை
எண்ணியபடி நான்!!

Y
ஒரு நீள் முத்தத்தை
தின்று தீர்க்கிறோம்
இருவரும்,
இன்னும் தீர்ந்தபாடில்லை......




Y
கேட்கும் ஆவலில் நானும்,
கொடுக்கும் ஆசையில் நீயும்
ஒரே புள்ளியில் நிற்கிறோம்.
"முத்தம்"

Y
தித்திக்க தித்திக்க பேசுகிறாய்,
கூடுதல் சுவைக்கு
முத்தம் சேர்த்து.

Y
ஒரே நேர்க்கோட்டில்
சந்தித்தோம் .
சிதறியது முத்தம்...

Y
உன் உதட்டு
பதிப்பில் பிரசுரமானது
என் கவிதை!!

Y

நீள் முத்தத்தின்
இடைப்பட்ட நிமிடங்களில்
ஜனித்தும் மரணித்தும் நான்.
 
- அகன்

கருத்துகள் இல்லை: