புதன், 19 டிசம்பர், 2012

குழந்தை தொழிலாளர்கள் - 1


குழந்தை தொழிலாளர்கள்


குழந்தையின் முதல் சிரிப்பில்
ஒரு
தேவதை பிறக்கிறாள்!!

"
இங்கு குழந்தை
தொழிலாளர்களுக்கு
வேலை இல்லை"
அறிவிப்பு-
தேவதைகளின்
கண்ணீர் அருவியில்
கரையவில்லை!!

"
இந்த அறிவிப்பு
மகிழ்வை தரவில்லையா?"
கடவுள் கேட்கிறார்??

தொண்டை அடைக்க
அவர்களின் பதில்
"
எங்குமே குழந்தைகள்
தொழிலாளர்கள் இல்லை" -
என்பதாக தானே
இருக்கவேண்டும்.

கதறும் தேவதைகள்
மனிதம் மரித்த
மண் விட்டு
சொர்க்கம் செல்கிறார்கள்
புதிதாய் பிறந்த தேவதையுடன் !!!

- அகன்

கருத்துகள் இல்லை: