புதன், 19 டிசம்பர், 2012

அன்னை தமிழின் இன்றைய நிலை

அன்னை தமிழின் இன்றைய நிலை ( எழுத்தோலை கவிதை திருவிழா )


பண்பட்ட
தமிழாசிரியன்
கேட்டான்..
பஸ்ஸ்டாப்பு லெஃப்டா?

குற்றியலுகரமாய்
முன் வார்த்தை முடிவிலும்,

உயிர்
எச்சமாய்
பின் வார்த்தை முடிவிலும்,

தொ-ங்கிக்
கொண்டிருக்கிறாள்
தமிழ்...

நேரமில்லை
உனக்கு
காப்பாற்றி மேலேற்ற!

பெருமைக்காய்
பொது இடத்தில
தமிழை மறுக்கிறாய்…

பகட்டான உடையில்லா தாய்
பள்ளிக்கு வருவதை
வெறுக்கும் சிறுவன் போல!

எப்போதாவது
வலிக்கும் போதும்,
சோகம் நெரித்து
கதறும் போதும்,
முன்னுக்கு வருகிறாள் தமிழ்..

கீறினால்
வெளியே பீரிடும்
ரத்தம் போல !

உண்மை
உணர்ந்து
மீண்டு வருவாயென
தவம் இருக்கிறாள்
தமிழ்...

உயிர்
வரைக்கும்
வலி கொடுத்து-
கிழித்துப் பிறந்தாலும்
பொருத்துக் கொள்ளும்
தாயைப் போல !

- அகன்


 

கருத்துகள் இல்லை: