தமிழ் வழி கல்வி ( எழுத்தோலை கவிதை திருவிழா )
ஆலின்
விழுது
ஆலைத் தாங்க வேண்டும்..
கல்வியைக் காரனம் சொல்லி
நீ
வேறைத் தாங்காதே !
இன்று பிற மொழியில்
கற்பது பெருமையென்று
சொன்னால்..
நாளை
நரகல் தின்பது
நாகரீகம் என்று
ஊட்டப்படுவாய் !
அறிவியலைக்
கற்க
அயல்மொழி வேண்டுமா?
தொலைநோக்கி வரும் முன்பே
செவ்வாயின் நிறம் சொன்ன
வம்சம் நீ !
காற்றில்லாக்
கடற்கரையில்
பட்டம் வெறும்
காகிதம் தான்...
உனக்கு காற்றாய் இருக்கட்டும்
தமிழ் !
ஒளிச்சேர்க்கை
செய்ய
ஆயிரம் மொழிகள்
இலைகளாய் வரும்...
உனக்கு வேராய் இருக்கட்டும்
தமிழ் !
தமிழில்
உலகை படி…
உன்னால் உலகம்
தமிழ்ப் படிக்கட்டும் !
- அகன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக