புதன், 20 மார்ச், 2013

காதல் கடிதம் வேறொரு வடிவில்







  
காதல் கடிதம்

காதல் கடிதம்

வேண்டும் என்று

கண்கள் உருட்டி

கேட்கிறாய்...


காரணம் தான் புரியவில்லை!!!


காதலை,

சொல்லும் போது

இருக்கும் கூச்சம்,

எழுதும் போது

இருக்காதோ??


காதில் விழும் வார்த்தைகள்

மூளைக்குள் செல்வது போல்

கண்ணில் விழும் வார்த்தைகள்

உயிருக்குள் செல்லுமோ?


எனது இயல்பான

வார்தைகளுக்கு

இன்னும் கொஞ்சம் உணர்ச்சி சேர்த்து

மீண்டும் மீண்டும் படிப்பாயோ?

 
எழுதி அழித்து,

அழித்து எழுதி

இப்போது

 எதுவுமே மிச்சமில்லை

 கடிதத்தில்!


காதலிப்பதை

 உணர்கிறேன் 

நான் !


காதலிக்கப்படுவதை

 உணர்கிறாய் 

நீ !



பின் 

கடிதத்தில் ஏன் காதலை

அடைக்கச் சொல்கிறாய்?

 

அது காற்றிலேயே

திரியட்டுமே… !


- அகன்



 

கருத்துகள் இல்லை: