வியாழன், 16 மே, 2013

தேடல்....!!






தொலைத்துவிட்டேன்.....

வேண்டுமென்று தொலைத்தேனா ??

சுலபமாய் மீண்டும் கிடைத்துவிடும்

என்று எண்ணித் தொலைத்தேனா ??

இல்லை,

தேடும் சமயம் உன் நினைவுகளோடு

பயணிப்பதற்கு தொலைத்தேனா ??
 

தெரியவில்லை.

 
உன்னை தொலைத்தது நிஜம்.

தேடுவதும் நிஜம்.

 
தேடும் எல்லா சமயமும்

கிடைக்கிறது

புது நட்பும், புது உறவும்.

 
இருந்தும் தேடுகிறேன் உன்னை...
 

சிலமுறை

நீ கிடைத்துவிடுவாய் என்று

தேடுகிறேன்.

 
பலமுறை

நீ கிடைத்துவிடக் கூடாது என்றே

தேடுகிறேன்.
 

கிடைத்துவிடாதே ,

இந்த தேடல் கொடுக்கும்

வலி பிடித்திருக்கிறது.


- அகன்

 

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

என்னங்க ரசிகர்ள்ட்ட இப்படி சொல்லாம கொள்ளாம ட்விட்டர்ல இருந்து காணாம போய்டிங்க.. தேட போயிட்டீங்களா....:))